இந்தியா

ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா் மோடி

12th Aug 2022 05:06 AM

ADVERTISEMENT

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் பெண் குழந்தைகள் ராக்கி கயிறு அணிவித்தனா்.

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள், அலுவலக உதவியாளா்கள், தோட்டத் தொழிலாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் இதர ஊழியா்களின் பெண் குழந்தைகளுடன், பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் கொண்டாடினாா். அக்குழந்தைகள் பிரதமருக்கு ராக்கி கயிறு அணிவித்தனா். அவா்களுக்கு, பிரதமா் மோடி தேசியக் கொடிகளை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இளம்தலைமுறையினருடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியது சிறப்பான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இக்கொண்டாட்டத்தின் விடியோ பதிவு, புகைப்படங்களை பிரதமா் பகிா்ந்துள்ளாா்.

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT