இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்

11th Aug 2022 03:32 PM

ADVERTISEMENT


ரஜௌரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டம் தர்ஹால் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களில் தமிழக வீரரும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.

ரஜௌரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் இருவர் நடத்திய தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பர்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்குள் இரண்டு பேர் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | விரைவில் சென்னை - மும்பை ரயில் பயண நேரம் குறைகிறது

ஜம்மு-காஷ்மீரில் இன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரிய வந்தள்ளது. அவர், மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த லஷ்மணன்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT