இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை மூடல்

11th Aug 2022 01:30 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, மேஹாத், சிற்றுண்டிச்சாலை, ராம்பன் ஆகிய இடங்களில் மண்சரிவு மற்றும் பெரிய கற்கள் உருண்டு விழுந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. முகலாய சாலை மற்றும் எஸ்எஸ்சி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

படிக்க: ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?

காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை இதுவாகும். சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT