நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
புதிதாக 16,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,42,06,996 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் 53 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,26,879ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,35,55,041 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,25,076 சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல்: 3 வீரர்கள் பலி
மேலும், நாடு முழுவதும் இதுவரை 207.29 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.