உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் கரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு சமீபகாலமாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று வெளியிட்ட செய்தியில்,
உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிந்த்து வாதிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | காவலர்களுக்கு பிரியாணி விருந்தளித்த டிஜிபி சைலேந்திரபாபு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 53 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.