இந்தியா

குஜராத்தில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதை ஆம் ஆத்மி தடுக்கிறது: அமைச்சர் குற்றச்சாட்டு

11th Aug 2022 07:02 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதை ஆம் ஆத்மி கவிழ்க்க நினைப்பதாக குஜராத் மாநில பாஜக அமைச்சர் ஹர்ஷ் சங்வி குற்றம் சாட்டியுள்ளார்.

நீண்ட காலமாக காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. 
 

சமீபத்தில் குஜராத் சென்றிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர செய்தால் காவல் துறையில் பணிபுரிபவர்களின் இந்த ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் எனப் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்வி ஆம் ஆத்மியின் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

இதையும் படிக்க: 35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இந்தியன் 2வில் இணையும் நடிகர்

ADVERTISEMENT

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறியதாவது: “ குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசு காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கும். சிலர் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பங்களை தவறாக வழிநடத்த நினைக்கிறார்கள். அவர்களது செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவல் துறையில் பணிபுரிபவர்களின் ஊதிய உயர்வு குறித்து முதல்வர் பல்வேறு துறைகளிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவர்களது ஊதிய உயர்வு குறித்த விவகாரம் சரியான பாதையில் செல்லும் போது அதனை கவிழ்க்க சிலர் முயற்சிக்கின்றனர். ஊதிய உயர்வு குறித்த விவகாரத்திற்கு இன்னும் சில நாட்களில் தீர்வு கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, ஏன் சிலர் இந்த விஷயத்தில் தங்களது ஆதாயத்திற்காக அரசியல் செய்கிறார்கள்” என்றார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை உயர்கிறது!

முன்னதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு அடிப்படை ஊதியமாக குஜராத்தில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த அடிப்படை ஊதியம் மிகக் குறைவானதாகும். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் காவல் துறையின் பணிபுரிபவர்களின் இந்த நீண்ட நாள் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT