இந்தியா

பால்டிக் கடலுக்கு அடியில் பேரழிவை ஏற்படுத்தும் 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

10th Aug 2022 11:43 AM

ADVERTISEMENT


பால்டிக் கடலுக்கு அடியில் இயற்கை பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் கடலுக்கு அடியில் புதைந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவை 70 மீட்டர் சுற்றளவு வரை தண்ணீரை மாசுபடுத்துவதோடு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொல்லும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 

பால்டிக் கடல் மத்தியதரைக் கடலைச் சார்ந்த ஒரு கடல். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை ரஷியர்களுக்கு மிகவும் தொலைவில் உள்ளது. 

இதுதொடர்பாக போலாந்தின் பிரபல செய்தித்தாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், 2011 மற்றும் 2019-க்கு இடையில் போலந்து அகாடமி ஆஃப் சயின்ஸ் நடத்திய ஆய்வில், பால்டிக் கடலின் அடிப்பகுதியில் சுமார் 1 டன் பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் கடலின் அடிப்பகுதியில் புதைந்துள்ளதாகவும், அவை காலப்போக்கில் சிதைவடைந்து சுற்றுச்சூழல் பேரழிவைத் தூண்டுவதற்கு தயாராக உள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | 2ஜி எத்தனால் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

ADVERTISEMENT

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட 40,000 முதல் 100,000 டன்கள் வரையிலான போர்க்கால ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலின் பல்வேறு பகுதிகளின் அடிப்பகுதியில் புதைந்துள்ளன. அவை காலப்போக்கில் சிதைவதால் சுற்றுச்சூழல் பேரழிவைத் தூண்டுவதற்கான அபாயகரமான சூழல் உருவாகி உள்ளது.  

வாயு குண்டுகள் கடலை 70 மீட்டர் சுற்றளவு வரை தண்ணீரை மாசுபடுத்துவதோடு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கையும் கொல்லும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 

மேலும், பால்டிக் கடலின் பல்வேறு பகுதிகளின் அடிப்பகுதியில் ரசாயன ஆயுதங்கள் முக்கியமாக கன்னிவெடிகள், பீப்பாய்கள் மற்றும் விமான குண்டுகள் என அனைத்தும் குப்பை கொட்டும் இடங்களை போன்று உள்ளதால் அவற்றின் "சரியான அளவை தற்போது மதிப்பிடுவது கடினம்." 

இதையும் படிக்க | இலங்கையில் வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் 246 சதவீதம் உயர்வு!

"கடலில் கிடக்கும் டன் கணக்கான பீப்பாய்கள் கான்வாய் வழித்தடங்களில் சீரற்ற இடங்களில் கப்பல்களில் இருந்து  வீசப்பட்டவை. அந்த ரசாயன ஆயுதங்களின் மரப்பெட்டிகள் அழுகும் வரை அவை நகர்ந்து, பின்னர் அவை நீரோட்டங்களினால் சிதைந்து கடற்பகுதியில் படிந்துள்ளன."

இவை இயற்கைக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துவதற்கு தயாராக உள்ளன. குறிப்பாக கடலின் பல்வேறு பகுதிகளில் அடியில் உள்ள வாயு வெடிகுண்டுகள் 70 மீட்டர் சுற்றளவு வரை தண்ணீரை மாசுபடுத்துவதோடு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கையும் கொல்லும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 

இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சோவியத் யூனியனை உள்ளடக்கிய முத்தரப்பு ஆணையத்தின் முடிவின் பேரில் நாஜி படைகளால் கைவிடப்பட்ட ரசாயன ஆயதங்கள் பால்டிக் கடலில் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெடிமருந்துகள் அசாதாரணமானவை அல்ல.

ADVERTISEMENT
ADVERTISEMENT