இந்தியா

படகில் இயந்திர கோளாறு: நடுக்கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் மீட்பு

10th Aug 2022 03:25 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்கோட் மாவட்டத்தில் உள்ள முருத்  ஜஞ்சிரா கடலில் இன்று காலை இயந்திர படகில் மீன்பிடிக்கச் சென்றபோது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டத்தால் படகிலிருந்த 10 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இந்நிலையில், ஆபத்து குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டதும் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

ADVERTISEMENT

மழை மற்றும் காற்றோட்டத்தால் அலைகளின் எழுச்சி அதிகமாக இருந்ததால் இயந்திரம் பழுதடைந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT