இந்தியா

அரசாங்கமோ, குடும்பமோ பெண்களின் பங்களிப்பு அவசியம்: முதல்வர் தாக்குர்

10th Aug 2022 05:02 PM

ADVERTISEMENT

 

இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் சிம்லாவில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் பண்டிகை நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார். 

அப்போது முதல்வர் தாகூர் பேசுகையில், 

அரசாங்கத்தை நடத்தினாலும் சரி, குடும்பத்தை நடத்தினாலும் சரி பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்று பொதுக் கூட்டத்தில் அவர் கூறினார். 

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் மற்றும் பெண்கள் முதல்வருக்கு ராகி கட்டினர். 

இதையும் படிக்க: இன்றும் கோவை, நீலகிரியில் மிகக் கனமழை பெய்யுமாம்!

ரக்ஷா பந்தன் நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இது உடன்பிறப்புகளுக்கு இடையிலான அன்பின் பிணைப்பைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 11 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

முன்னதாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி, பள்ளி மாணவர்கள் தாங்கள் தயாரித்த ராகியைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்தனர். எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கட்டினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT