இந்தியா

கோவேக்ஸின், கோவிஷீல்ட் பயனாளிகளுக்கு பூஸ்டராக கோா்பிவேக்ஸ்: மத்திய அரசு ஒப்புதல்

10th Aug 2022 11:39 AM

ADVERTISEMENT

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசி தற்போது 12 முதல் 18 வயதுடைய சீறார்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தப் பரிசோதனையில், நோய் எதிா்ப்பாற்றல் அதிகரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பரிசோதனைகள் தொடா்பான விவரம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பவானி தேவி!

அதனைத்தொடா்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் முதல் இரண்டு தவணைககளாக கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டு செலுத்திக் கொண்டாலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டு தவணைகளாகச் செலுத்திக்கொண்ட தடுப்பூசிக்கு பதிலாக வேறொரு தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாகச் செலுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி கோா்பிவேக்ஸ் ஆகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT