இந்தியா

பீமா கோரேகான் வழக்கு: வரவர ராவுக்கு ஜாமீன்

10th Aug 2022 09:49 PM

ADVERTISEMENT

 

தெலுங்கு கவிஞரும் சமூக ஆா்வலருமான வரவர ராவின் மருத்துவ காரணங்களுக்காக உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

2017, டிசம்பா் 31-ஆம் தேதி புணேவில் நடைபெற்ற எல்கா் பிரிஷத் மாநாட்டில் அவா் பேசிய மறுநாள் பீமா கோரேகானில் வன்முறை நடைபெற காரணமாக அமைந்ததாகவும், இதற்கு மாவோயிஸ்ட் தொடா்பு இருப்பதாகவும் புணே போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இதில் மருத்துவ காரணங்களுக்காக கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வரவர ராவ் இடைக்கால ஜாமீன் பெற்றாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வரவர ராவ் மனுதாக்கல் செய்தார். அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. 

இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில், பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மருத்துவ காரணங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது
 

ADVERTISEMENT
ADVERTISEMENT