இந்தியா

நிதீஷ், தேஜஸ்விக்கு அகிலேஷ் வாழ்த்து

10th Aug 2022 04:08 PM

ADVERTISEMENT

 

லக்னௌ: பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவுக்கும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில், 

பிகார் முதல்வராக ஸ்ரீநிதீஷ் குமார்ஜி மற்றும் துணை முதல்வராக ஸ்ரீ தேஜஸ்வி யாதவ்ஜி பதவியேற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

படிக்க: காதலுக்கு எதிர்ப்பு: காதலருடன் சேர்ந்து 16 வயது மகனைக் கொன்ற தாய்!

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா், தனது முதல்வா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிதீஷ் குமாருக்கு ஆதரவளித்த நிலையில், எட்டாவது முறையாக பிகார் முதல்வராக இன்று மீண்டும் நிதீஷ் குமார் பதவியேற்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT