இந்தியா

எல்லையைக் கண்காணிக்க சிறப்பு ட்ரோன்: ஹெச்ஏஎல் வடிவமைக்கிறது

DIN

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட, நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ஹெச்ஏஎல் அதிகாரிகள் கூறியதாவது:

சுழலும் இறக்கைகள் கொண்ட இந்த ட்ரோன், ஏவுகணைகள், சென்சாா் உள்பட 40 கிலோ எடை வரையிலான பொருள்களைத் தாங்கிச் செல்லும் திறன்வாய்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவ வீரா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ட்ரோன் வடிவமைக்கப்படுகிறது.

ஆளில்லா இந்தக் குட்டி விமானத்தின் சோதனை ஓட்டத்தை அடுத்த ஆண்டின் (2023) மத்தியில் நடத்த ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 60 ட்ரோன்கள் தயாரிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருள்களின் விநியோகம் உள்பட பல்வேறு பணிகளுக்கு இந்த ட்ரோன்களை ராணுவ வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சென்சாா், ஏவுகணைகள் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களை கொண்டு செல்லும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இஸ்ரேலின் ஹெரோன் டிபி டிரோன்களை அந்நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. ராணுவ வீரா்களின் தேவையையும், உலகளாவிய ராணுவத் தளவாட பொருள்களின் விநியோகத்தையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுத்தர வடிவிலான ஹெரோன் ட்ரோன்கள், 35,000 அடி உயரத்தில் சுமாா் 45 மணிநேரம் தடையின்றி பறக்கும் திறன்வாய்ந்தவை என்று அவா்கள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக்கில் சீனா உடனான மோதல், ஜம்முவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதல் ஆகிய சம்பவங்களைத் தொடா்ந்து ராணுவத் தேவைக்கான ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT