இந்தியா

இலவசத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள்: கேஜரிவால்

8th Aug 2022 04:58 PM

ADVERTISEMENT

 

ஏழை மக்களுக்காக அரசு வழங்கும் இலவசங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

பெருநிறுவனத்தைச் சேர்ந்த முதலாளிகளின் ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதுதான் மக்களுக்கு அரசு செய்யும் துரோகமே தவிர, ஏழை மக்களுக்கு இலவசத் திட்டங்களை வழங்குவதை அல்ல எனவும் சாடினார். 

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் மத்திய அரசால், இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவத்திற்கு எதிரான சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. 

ADVERTISEMENT

படிக்க'நமது ஆட்சியால் அசிங்கப்படுகிறேன்': பாலியல் புகாரால் பாஜக எம்.பி. கோபம்

நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளோம். இதனையொட்டி மக்களுக்கான இலவசத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தவுள்ளோம். ஆனால் இலவசத் திட்டங்களுக்கு எதிராக பாஜக அரசு உருவாக்கியுள்ள சூழலுக்கு எதிராக அவை நடமுறைப்படுத்தப்படும். 

ஏழை மக்களுக்காக அரசு அறிவிக்கும் இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள். பாஜக அரசு தங்களது நண்பர்களான பெருமுதலாளிகளின் நலனுக்காக ரூ.10 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அவ்வாறு பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வழங்குபவர்கள்தான் துரோகிகள். 

படிக்கஅயோத்தியில் சட்டவிரோதமாக நிலம் விற்பனை: பாஜக எம்எல்ஏ மோசடி

வாக்குகளுக்காக மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதாக மோடி கூறுகிறார். இலவசங்களால் நாடு முன்னேற்றமடையாது எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் உண்மையில் அவர் ஏழை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இலவசங்களை எதிர்ப்பது மிகவும் ஆபத்தானது என சுட்டிக்காட்டினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT