இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாபா நகர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் பெரோஸ்பூர்-ஷிப்கி லா தேசிய நெடுஞ்சாலை எண் 5ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கின்னவூர் மாவட்ட அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
படிக்க: திருப்பதிக்குச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி
பாபா நகர் மாவட்ட நீதிபதி பிம்லா சர்மா கூறுகையில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, நெடுஞ்சாலையில் கற்கள் குவிந்துள்ளது. சாலையை சுத்தப்படுத்தும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சரிசெய்யப் பின்னர், மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றார்.