இந்தியா

கிளி கத்தியதுக்கு காவல் நிலையத்தில் புகாரா கொடுப்பது, மகாராஷ்டிரத்தில் விநோதம்

7th Aug 2022 05:20 PM

ADVERTISEMENT

பக்கத்து வீட்டுக் காரரின் கிளி தொடர்ச்சியாக கத்தி தொந்தரவு செய்வதாக முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது விநோதமாக உள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுரேஷ் ஷுண்டே என்ற 72 வயது முதியவர் இந்தப் புகாரினை அளித்துள்ளார். நேற்று முன் தினம் அளிக்கப்பட்ட இந்தப் புகாரில் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டில் வளர்க்கும் கிளி தொடர்ச்சியாக சத்தமிடுவது தொந்தரவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் இந்தப் புகாரினை கத்கி காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: நடனம், இசை மூலம் திருக்குறள்: கலைஞர்களின் உலக சாதனை முயற்சி

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ நாங்கள் சுரேஷ் ஷிண்டே அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை சட்டப்படி விசாரிப்போம்” என்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT