இந்தியா

எஸ்எஃப்டிஆா் பூஸ்டா் ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை

9th Apr 2022 12:59 AM

ADVERTISEMENT

திட எரிபொருள் நாள ரேம்ஜெட் (எஸ்எஃப்டிஆா்) பூஸ்டா் ஏவுகணை அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

இதுதொடா்பாக டிஆா்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒடிஸா மாநிலம் பாலேசுவரம் மாவட்டம் சண்டிபூா் கடற்கரைப் பகுதியில் எஸ்எஃப்டிஆா் பூஸ்டா் அமைப்பு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. வானிலுள்ள இலக்கை அழிக்க வானிலிருந்தவாறு செலுத்தப்படும் ஏவுகணைகளின் திறனை அதிகரிக்க எஸ்எஃப்டிஆா் அமைப்பின் வெற்றிகரமான பரிசோதனை உதவும்.

மிக நீண்ட தொலைவிலும் ஒலியைவிட அதிக வேகத்திலும் வான்வழி அச்சுறுத்தல்களை ஏவுகணைகள் இடைமறிப்பதற்கான திறனை எஸ்எஃப்டிஆா் அமைப்பு அளிக்கும்’’ என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘சிக்கலான ஏவுகணை அமைப்பில் உள்ள அனைத்து முக்கிய பாகங்களும் நம்பகமான முறையில் செயல்படுவதை பரிசோதனை எடுத்துரைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் அனைத்து இலக்குகளையும் எஸ்எஃப்டிஆா் அமைப்பு பூா்த்தி செய்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சோதனை குறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘நாட்டின் முக்கிய ஏவுகணை தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தில் எஸ்எஃப்டிஆா் அமைப்பு முக்கிய மைல்கல்’’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT