இந்தியா

வரதட்சிணையின் பலன்கள் என்னென்ன? சமூகவியல் புத்தகத்தில் சர்ச்சைப் பாடம்

5th Apr 2022 06:16 PM

ADVERTISEMENT

 

செவிலியர்களுக்கான சமூகவியல் புத்தகத்தில் வரதட்சிணையின் பலன்கள் என்னென்ன என்ற தலைப்பில்  பாடம் அமைந்துள்ளது சமூக  வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரும், ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை பர்கிந்து வருகின்றன. 

செவிலியர்களுக்கான சமூகவியல் புத்தகத்தை (டெக்ஸ் புக் ஆஃப் சோசியாலஜி ஃபார் நர்சஸ்) டி.கே.இந்திராணி என்பவர் எழுதியுள்ளார். இந்திய நர்சிங் கவுன்சில் வழங்கியுள்ள பாடத்திட்டத்தில் இந்த புத்தகம் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் அதிக அளவில் பெண்களே செவிலியர் படிப்பைத் தேர்வு செய்து படித்து வருகின்றனர். இந்நிலையில், வரதட்சிணை வாங்குவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்ற தலைப்பில் பாடப்பிரிவு இடம்பெற்றுள்ளது.

அதில், வீட்டிற்குத் தேவையான பொருள்களுக்கும், உடைகளுக்கும்,  சமையல் பாத்திரங்களுக்கும் வரதட்சிணை எந்த அளவுக்கு உதவுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

மேலும், அழகில் குறைந்த ஒரு பெணுக்கு அதிக வரதட்சணையின் மூலம் நல்ல வாழ்க்கையைத் துணையை அமைத்துக்கொடுப்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த பாடத்தின் உட்பிரிவு உள்ளடங்கிய பக்கங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்லூரி பயிலும் இளம்பெண்களை இதுபோன்ற பிற்போக்குத்தனமான பாடப்பிரிவுகள் தவறாக வழிநடத்தக்கூடும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT