இந்தியா

காஷ்மீர்: பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக்கொலை

5th Apr 2022 12:00 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த காவலர் பலியானார். 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு, நாட்டின் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைப் போல அந்தப் பகுதியிலும் பிறமாநில மக்கள் சகஜமாக சென்று வரவும், சொத்துகளை வாங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் தங்கியுள்ள வெளிமாநில மக்களை முக்கியமாக வெளிமாநிலத் தொழிலாளா்களை அச்சுறுத்தும் நோக்கில் அவா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று ஸ்ரீநகரில் இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் வெளிமாநிலத் தொழிலாளிகள் இருவரை சுட்டனர். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரம் பாதுகாப்புப் பணியில் இருந்த 2 மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த காவலர்களை நோக்கியும் தீவிரவாதிகள் சுட்டதில் ஒருவர் உயிரிழத்தாகவும் மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT