இந்தியா

இந்தியாவில் மேலும் 795 பேருக்கு கரோனா: 2-ம் நாளாக ஆயிரத்திற்கும் கீழ் பதிவு

5th Apr 2022 12:11 PM

ADVERTISEMENT

இந்தியாவில் இன்று மேலும் 795 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 795 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 12,054 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 58 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.

இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 4,30,29,839 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,416 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,280 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,24,96,369 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 16,17,668 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 184.87 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT