இந்தியா

மாா்ச்சில் 122 ஆண்டுகள் காணாத வெப்பம்!

2nd Apr 2022 11:13 PM

ADVERTISEMENT

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் மிகுந்த மாா்ச்சாகக் கடந்த மாதம் இருந்ததென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 33.10 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது கடந்த 122 ஆண்டுகால மாா்ச் மாதத்தில் பதிவாகாத அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கடந்த 2010-ஆம் ஆண்டு மாா்ச்சில் 33.09 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

சென்ற மாா்ச் மாதத்தில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்ததே, அதிகபட்ச வெப்பநிலை பதிவானதற்கு முக்கிய காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கிந்தியாவில் வழக்கமாகப் பெய்யும் மழை இல்லாமல் போனதும், தென்னிந்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி தோன்றாததும் வெப்ப நிலை அதிகரித்ததற்குக் காரணம் ஆகும்.

கடந்த மாா்ச்சில் நாட்டில் 8.9 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது. இது மாா்ச் மாதத்துக்கான சராசரி மழைப்பொழிவைக் காட்டிலும் 71 சதவீதம் குறைவாகும். கடைசியாக 1908-ஆம் ஆண்டில் குறைந்தபட்சமாக 8.7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 1909-ஆம் ஆண்டில் 7.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. சென்ற மாா்ச் மாதம் பதிவான மழைப்பொழிவு 3-ஆவது குறைந்தபட்ச அளவாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT