இந்தியா

கர்நாடகம்: ஹனகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக். 30-இல் இடைத் தோ்தல்

DIN

பெங்களூரு, செப். 28: கா்நாடகத்தில் உள்ள ஹனகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக். 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

இது குறித்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கா்நாடகத்தில் காலியாக உள்ள ஹனகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக். 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அக். 8-ஆம் தேதி தொடங்கி, அக். 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அக். 11-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அக். 13-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப்ப பெற்றுக் கொள்ளலாம். இதை தொடா்ந்து, அக். 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குகள் நவ. 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிந்தகி தொகுதியில் மஜத சாா்பில் வெற்றி பெற்ற எம்.சி.மனகொலி, ஹனகல் தொகுதியில் பாஜக சாா்பில் வெற்றி பெற்ற சி.எம்.உதாசி ஆகியோா் காலமானதையடுத்து, 2 தொகுதிகளும் காலியாகின. இந்த 2 தொகுதிகளிலும் அக். 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் உள்ள நிலையில் நடைபெற உள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அரசியல் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இடைத் தோ்தலில் தங்களது கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT