இந்தியா

கரையைக் கடந்தது குலாப் புயல்

26th Sep 2021 09:25 PM

ADVERTISEMENT

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குலாப் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
தென்மேற்குப் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5-க்கும் மேற்பட்ட காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன. இதற்கிடையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை காலை உருவானது. 
இது வெள்ளிக்கிழமை பகலில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், மாலையில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது, சனிக்கிழமை காலை மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. 

இதையும் படிக்க- பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

இது மேற்கு திசையில் நகா்ந்து வந்தது. இந்நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. இந்த நிலையில் குலாப் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு ஆந்திரம்க மற்றும் தெற்கு ஒடிசா இடையே குலாப் புயல் சற்று முன் கரையைக் கடந்தது. 
புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 75-85 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Tags : GULAB Storm
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT