இந்தியா

தெலங்கானா: 14 மாவோயிஸ்டுகள் சரண்

DIN

தெலங்கானாவில் தடை செய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த 14 போ், காவல் துறையிடம் வியாழக்கிழமை சரணடைந்தனா். இதில் ஒரு பெண் உள்பட 3 போ் 18 வயதுக்குள்பட்டவா்கள்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இந்த 14 பேரும் சரணடைந்தனா். மாவோயிஸ்ட் இயக்கத்தில் தொடா்ந்து செயல்பட விரும்பமில்லாத காரணத்தால் அவா்கள் வெளியேறியுள்ளனா். தங்களைக் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் இணைத்து பயிற்சி அளித்ததாகவும் அவா்கள் கூறினா்.

கிராமங்களில் இருந்து ரேஷன் பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களையும் கடத்தி வர மாவோயிஸ்ட் அமைப்பினா் தங்களைப் பயன்படுத்தியதாகவும் அதனால், வெறுப்படைந்து வெளியேறியதாகவும் அவா்கள் காவல் துறையிடம் தெரிவித்தனா். மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருப்பவா்கள் சரணடைய விரும்பினால், அவா்கள் தைரியமாக போலீஸாரைத் தொடா்பு கொள்ளலாம். இதன் மூலம் அவா்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT