இந்தியா

மகாராஷ்டிரத்தில் கொடூரம்; 29 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி

23rd Sep 2021 05:48 PM

ADVERTISEMENT

மும்பை அருகே 15 வயது சிறுமி ஒருவரை இரண்டு சிறார்கள் உள்பட 29 பேர் கடந்த ஒன்பது மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர். இந்த கொடூர குற்றத்தின் மற்ற விவரங்களை மும்பை காவல்துறை வெளி்யிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஆண் நண்பர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவதை விடியோவாக எடுத்துள்ளார்.

ஆண் நண்பரின் மற்ற நண்பர்கள், இந்த விடியோவை வைத்து மிரட்டி அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதுகுறித்து கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் ஆணையர் தத்தாத்ரே கராலே கூறுகையில், "காதலன் ஜனவரியில்  அச்சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியுள்ளார். 

இந்த சம்பவத்தை அவர் விடியோ எடுத்துள்ளார். பின்னர், இதை வைத்து ஆண் நண்பர் பிளாக்மெயில் செய்யத் தொடங்கியுள்ளார்.  டோம்பிவ்லி, பத்லாபூர், முர்பாத், ரபாலே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறைந்தது நான்கைந்து தடவைகள் அவரது நண்பர்கள் உள்பட பலர் அச்சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்கயுபிஎஸ்சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ADVERTISEMENT

சிறுமி புகார் அளித்ததன் பேரில், குற்றம்சாட்டப்பட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

பாலியல் வன்புணர்வு, தொடர் பாலியல் வன்புணர்வு, கூட்டு பாலியல் வன்புணர்வு, போக்சோ என பல்வேறு பிரிவுகளின் அடையாளம் தெரியாத நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.


 

Tags : mumbai gang rape teen rape
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT