இந்தியா

லஞ்சப் பணம் ரூ.4.7 கோடியை அனில் தேஷ்முக் வாங்கியதற்கு முகாந்திரம்: சிறப்பு நீதிமன்றம்

DIN

மகாராஷ்டிரத்தில் காவல் உதவி ஆய்வாளா் சச்சின் வஜேவிடம் இருந்து லஞ்சமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.4.7 கோடியை முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் வாங்கியதற்கான முகாந்திரம் உள்ளது என்று அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.

மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகளிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்து வழங்க வேண்டுமென உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக முன்னாள் மும்பை காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டியிருந்தாா். ஆனால், காவல் ஆணையா் பதவியில் இருந்து அவா் நீக்கப்பட்டதால், தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அனில் தேஷ்முக் கூறியிருந்தாா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக, மும்பை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதில் நடந்த கருப்புப் பண மோசடி தொடா்பாக, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சச்சின் வஜே, தேஷ்முக்கின் தனிச் செயலா் சஞ்சீவ் பலாந்தே, நோ்முக உதவியாளா் குந்தன் ஷிண்டே மற்றும் 11 போ் மீது அமலாக்கத் துறை இந்த மாதத் தொடக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே கடந்த 16-ஆம் தேதி பரிசீலனைக்கு உள்படுத்தி சில முடிவுகளை வெளியிட்டாா். அந்த விவரங்கள் சனிக்கிழமை கிடைக்கப்பெற்றன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

சச்சின் வஜே உள்ளிட்டோரின் வாக்குமூலங்கள், குற்றச்சாட்டுகளைக் கவனமாக ஆய்வு செய்ததில், சச்சின் வஜே மற்றும் குந்தன் ஷிண்டே ஆகியோரிடம் இருந்து அனில் தேஷ்முக் ரூ.4.7 கோடி வாங்கியதற்கான முகாந்திரம் உள்ளது தெரியவந்துள்ளது.

பின்னா், அந்தத் தொகையை அனில் தேஷ்முக் தன் மகன் ரிஷிகேஷுக்கு சொந்தமான ஸ்ரீசாய் சிக்ஷன் சன்ஸ்தா என்ற போலி நிறுவனத்தில் டெபாசிட் செய்தாா். குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பா் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அந்த விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT