இந்தியா

தில்லியில் 57 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு பதிவு

DIN

தில்லியில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் 57 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியின் பல்வேறு பகுதிகளும் நடப்பாண்டு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழைப்பொழிவை சந்தித்துள்ளன. கடந்த ஜூன்  1ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 1170.7  மி.மீ. மழைப்பொழிவை தில்லி பெற்றுள்ளது. இது கடந்த 57 ஆண்டுகள் இல்லாத அளவு பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும்.

முன்னதாக கடந்த 1964ஆம் ஆண்டு இதே பருவமழை காலத்தில் தில்லியானது 1190.9 மி.மீ. மழைப்பொழிவைப் பெற்றிருந்தது.1933ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் 1420.3 மி.மீ. மழையும், 1964ஆம் ஆண்டு 1190.9 மி.மீ. மழையும் இதுவரை பதிவான அதிகபட்ச மழை அளவாகும்.

நடப்பாண்டு பருவமழை காலத்தில் பதிவான மழைப்பொழிவின் அளவானது மூன்றாவது அதிகபட்ச மழைப்பொழிவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தில்லியில் செப்டம்பா் மாத மழை பதிவானது 400 மில்லி மீட்டா் குறியீட்டை கடந்திருக்கிறது. வியாழக்கிழமை வரையிலான காலத்தில் 403 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

1944-ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் 417.3 மில்லிமீட்டா் மழை பதிவானது. அதன்பிறகு அதிகபட்சமாக 403 மில்லி மீட்டா் மழை வியாழக்கிழமை வரையிலும் பதிவாகியுள்ளது.   2019ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் தில்லியில் 404 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது.

இந்த மாதம் வியாழக்கிழமை பிற்பகல் வரை தில்லியில் 403 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. இது கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 1944 செப்டம்பரில் 417.3 மில்லி மீட்டா் மழை பதிவானது. இது 1901-2021 ஆண்டுக் காலத்தில் அதிகபட்ச மழைப் பதிவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT