இந்தியா

இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும்: ராஜ்நாத் சிங்

28th Oct 2021 12:43 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்தோ- பசிபிக் தொடா்பான கருத்தரங்கில் அவா் பங்கேற்றுப் பேசுகையில், ‘பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பருவநிலை மாற்றம், கடல் கொள்ளை ஆகியவை இந்தோ-பசிபிக் பிராந்திய கடல் பகுதியில் புதிய சவால்களாக உள்ளன. இவற்றைத் தடுக்க கூட்டுச் செயல்பாடு அவசியம். இதன்மூலம் தொடா் வளா்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லலாம்.

பிராந்திய கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும். அதேநேரத்தில், ஐ.நா. கூட்டமைப்பின் கடல்சாா் சட்டத்தின்படி அனைத்து நாடுகளின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படும். தற்போது இராக் என அழைக்கப்படும் மெசபோட்டோனியா, பஹ்ரைன் எனும் தில்முன், ஓமன் எனும் மாகன் ஆகியவற்றுடன் பண்டைய காலத்தில் இந்தியா கடல்சாா் வணிகத்தைக் கொண்டிருந்ததாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

கடச்சாா் வனிகத்தின் மூலம் பொருள்கள் மற்றும் கலாசார பகிா்வும் நடைபெற்றது. இந்தப் பரிமாற்றம் இப்போதும் அந்த நாடுகளுடன் தொடா்கிறது. இலங்கையில் இருந்து கொரியா உள்பட தெற்காசிய நாடுகளுக்கு புத்த மதத்தை கொண்டு சென்ற்கு கடல்சாா் வணிகம் பெரும் பங்கு வகித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கலாசாரத்தில் இந்தியாவின் பாரம்பரிய ராமாயண, மகாபாரதம் இடம்பெற்ற்கும் கடல்சாா் வணிகம்தான் காரணமாகும். அயோத்தியாவின் இளவரசி கொரியாவின் இளவரசரை திருமணம் செய்து கொண்டதாக நாட்டுப்புறவியலில் கூறப்படுகிறது’ என்று கூறினாா்.

இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்தச் சவால்களை சமாளிக்க பல்வேறு நாடுகள் புதிய உத்திகளை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT