இந்தியா

கோவேக்ஸின் அனுமதி: கூடுதல் தகவல் கோரும் உலக சுகாதார அமைப்பு

27th Oct 2021 01:52 AM

ADVERTISEMENT

இந்தியாவைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினுக்கு அவசர பயன்பாட்டுக்கான அனுமதி அளிப்பதற்கு கூடுதல் விளக்கங்களை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

‘உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோவேக்ஸினுக்கு அனுமதி அளிப்பதற்கு கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதாக முடிவு செய்யப்பட்டது; உற்பத்தியாளரிடமிருந்து விளக்கங்கள் கிடைத்ததும், நவ. 3-ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என உலக சுகாதார அமைப்பு பிடிஐ நிறுவனத்தின் கேள்விக்கு இ-மெயில் மூலம் பதிலளித்துள்ளது.

முன்னதாக, ‘கோவேக்ஸினை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிப்பதற்காக அதன் ஆய்வுத் தரவுகளை உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து வருகிறது. அந்தத் தரவுகளின் மீது குழு திருப்தியடைந்தால், அடுத்த 24 மணி நேரத்தில் அவசர பயன்பாட்டுக்கான பரிந்துரை வெளியாகும்’ என்று அமைப்பின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்திருந்தாா்.

கரோனா தொற்றுக்கு எதிராக 77.8 சதவீதம், புதிய டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 சதவீத செயல் திறனை கோவேக்ஸின் தடுப்பூசி கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : WHO COVAXIN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT