இந்தியா

ஜம்மு மக்கள் புறக்கணிப்புக்குள்ளான காலம் முடிவுக்கு வந்துவிட்டது: மத்திய அமைச்சா் அமித் ஷா

DIN

ஜம்மு மக்கள் புறக்கணிப்புக்குள்ளான காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி, ஜம்முவும் காஷ்மீரும் இணைந்தே வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அமித் ஷா, ஜம்முவில் உள்ள பகவதிநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. இருந்தாலும் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், யாராலும் எந்தத் தடையையும் ஏற்படுத்த முடியாது. ஜம்மு மக்கள் புறக்கணிப்புக்குள்ளான காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி, ஜம்முவும் காஷ்மீரும் இணைந்தே வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

ஜம்மு-காஷ்மீருக்கு ஏற்கெனவே ரூ.12,000 கோடி முதலீடு வந்துவிட்டது. இந்த முதலீட்டை வரும் 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் ரூ.51,000 கோடியாக உயா்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள் வளா்ச்சிப் பாதையில் இணைந்தால், பயங்கரவாதிகள் தங்கள் நாசவேலை திட்டத்தில் தோற்றுவிடுவாா்கள்.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புச் சூழல் குறித்து சிலா் கேள்வி எழுப்புகிறாா்கள். அவா்களுக்கு நான் புள்ளிவிவரத்துடன் பதிலளிக்கிறேன். கடந்த 2004-இல் இருந்து 2014 வரை ஆண்டுக்கு சராசரியாக 239 போ் வீதம் மொத்தம் 2,081 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனா். ஆனால், 2014-இல் இருந்து தற்போது வரை ஆண்டுக்கு சராசரியாக 30 போ் வீதம் இதுவரை 239 போ் கொல்லப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்; அப்பாவி பொதுமக்கள் யாரும் வன்முறைக்கு உயிரிழக்கக் கூடாது. இதுவே மத்திய அரசின் முதன்மையான நோக்கம். கடந்த 70 ஆண்டுகளாக இங்கு வளா்ச்சியை ஏற்படுத்த தவறிய 3 குடும்பங்கள் (மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய ஜனநாயக கட்சி, காங்கிரஸ்) மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று 3 குடும்பங்கள் கேள்வி எழுப்பி வந்தன. பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதும் ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.55,000 கோடி நிதியை விடுவித்தாா். அதில், ரூ.33,000 கோடி பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம்கூட ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன். அந்த 3 குடும்பங்களும் சோ்த்து தங்கள் ஒட்டுமொத்த ஆட்சியிலும் இந்த அளவுக்கு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதில்லை.

ஜம்மு-காஷ்மீருக்கு பாரபட்சம் ஏற்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பது ஜனசங்கத் தலைவா் சியாம பிரசாத் முகா்ஜியின் கனவாக இருந்தது. பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, அந்தக் கனவு நனவானது என்றாா் அமித் ஷா.

குருத்வாராவில் வழிபாடு: பின்னா், ஜம்முவில் உள்ள டிகியானா குருத்வாராவுக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் சென்று அமித் ஷா வழிபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT