இந்தியா

மோடியின் கோட்டையை தகர்க்க ராகுல் திட்டம்; குஜராத்தை இலக்காக வைக்கும் காங்கிரஸ்

23rd Oct 2021 12:50 PM

ADVERTISEMENT

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தை தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களிலுமே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளாகக் அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்த விஜய் ரூபானி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பூபேந்திரபாய் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், அதைக் கூடுதல் கவனத்துடன் கையாள்கிறது பாஜக தலைமை. 

கடந்த 2017இல் நடந்த தேர்தலிலேயே பாஜக நூலிழையிலேயே பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 99 இடங்களும் காங்கிரசுக்கு 77 இடங்களும் உள்ளன. அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் சத்தமில்லாமல் குஜராத் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. கன்னையா குமார் சமீபத்தில் தான் காங்கிரஸில் இணைந்தார். அதேபோல சுயேச்சை எம்எல்ஏ-ஆக உள்ள ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் இணையவுள்ளது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

ADVERTISEMENT

இச்சூழலில் குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அமித் சவ்தா, சக்திசிங் கோஹில், பரேஷ் தனனி, அர்ஜுன் மோத்வாடியா மற்றும் அமீ யாஜ்னிக் ஆகியோருடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிக்கபோதைப் பொருள் விவகாரம்: நடிகர் ஷாருக்‍கான் வீட்டில் போ​லீசார் அதிரடி சோதனை

அடுத்தாண்டு, காங்கிரஸ் உள்கட்சி தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், அது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு ஹர்திக் படேல் மற்றும் சக்திசிங் கோஹில் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

2022 ஆம் ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராகுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Tags : rahul gandhi Gujarat Congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT