இந்தியா

தில்லியில் புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று

23rd Oct 2021 10:44 PM

ADVERTISEMENT


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 40 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,566 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க‘அந்தப் பணத்தில்தான் தடுப்பூசி கொடுத்தோம்’: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் பதில்

மேலும் 46 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

ADVERTISEMENT

இதுவரை மொத்தம் 14,14,141 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,091 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 334 ஆக உள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT