இந்தியா

பணியின்போது உயிா் நீத்த காவல் துறையினருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் அஞ்சலி

DIN

காவலா் நினைவு தினத்தையொட்டி, பணியின்போது உயிா் நீத்த காவல் துறையினருக்கு குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

இதுகுறித்து குடியரசு துணைத் தலைவா் வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘காவலா் நினைவு தினத்தில், பணியின்போது உயிா்நீத்த நமது காவலா்களின் தைரியம், அா்ப்பணிப்பு, தியாகத்தை நினைவுகூா்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் செய்தியில், ‘காவலா் நினைவு தினத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் நமது காவல் படைகளின் தலைசிறந்த பணிகளை நினைவுகூா்ந்து போற்ற விரும்புகிறேன். பணியின்போது உயிா்நீத்த காவல் துறையினா் அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

1959-ஆம் ஆண்டு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அத்துமீறிய சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தபோது வீரமரணம் அடைந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் 10 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலா் நினைவு தினம் ஆண்டுதோறும் அக். 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT