இந்தியா

உ.பி: அரசு வேலை வாங்கித் தருவதாக 500 பேரை ஏமாற்றிய 4 பேர் கைது

22nd Oct 2021 12:04 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 பேரை ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 பேரிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றிய 4 பேரை அம்மாநில சிறப்பு படையினர் கைது செய்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க | கதையல்ல நிஜம்: ஆறு மகள்களையும் மருத்துவர்களாக்கிய கேரள தம்பதி

மேலும் கைதானவர்களிடமிருந்து போலி அரசுப் பணி ஆணைச் சான்றிதழ் , 9 ஏடிஎம் கார்டுகள் , 6 கைபேசிகள் , சட்டமன்ற நுழைவுச் சீட்டு , 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.2,387 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து சிறப்பு படையின் துணைக் காவல் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் , ‘ அப்பாவி மக்களிடம் அரசுப் பணி ஆசையைத் தூண்டி அவர்களிடமிருந்து பெரிய தொகையை போலி நிறுவனங்களின் பெயரில் இவர்கள் பெற்றது உறுதியாகியிருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

கைதானவர்கள்: அருண்குமார் துபே , அனிருத்தா பாண்டே , காலித் முனாவர் , அனுராக் மிஸ்ரா

Tags : uttar pradesh lucknow cheating
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT