இந்தியா

தில்லியில் புதிதாக 22 பேருக்கு கரோனா

21st Oct 2021 05:52 PM

ADVERTISEMENT


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,563 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 21 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இதையும் படிக்க | 'வரலாற்று நாள்' - 100 கோடி தடுப்பூசி செலுத்தியது குறித்து பிரதமர் மோடி ட்வீட்

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,488 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,14,087 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,090 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 311 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 62,980 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,98,33,662 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT