இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

21st Oct 2021 03:16 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை மூன்று சதவிகிதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமல்படுத்தப்படும் பட்சத்தில், மத்திய அரசின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 31 சதவிகிதமாக உயரும்.

மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, இன்று மதியம் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கொடையும் ரொக்கமாக பணமும் பெறுவர் என மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்துறை செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இது அமலுக்குவந்தது. இதனால், 48.34 லட்சம் ஊழியர்களும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெற்றனர். 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, வெளியான அறிவுப்புகளில் அகவிலைப்படி குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இந்த காலத்திற்கான அகவிலைப்படி விகிதம் அடிப்படை ஊதியத்தில் 17 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இது கூடுதல் தவணைகளுடன் அடிப்படை ஊதியத்தில் 28 சதவிகிதமாக ஜனவரி 1, 2020 அன்று உயர்த்தப்பட்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பின்வருமாறு அகவிலைப்படி சதவிகிதம் கணக்கிடப்பட்டது.

2020ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, அடிப்படை ஊதியத்தில் 21 சதவிகிதமாக அகவிலைப்படி கணிக்கிடப்பட்டது. 2020ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை, அடிப்படை ஊதியத்தில் 24 சதவிகிதமாக அகவிலைப்படி கணிக்கிடப்பட்டது.

2021ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை, அடிப்படை ஊதியத்தில் 28 சதவிகிதமாக அகவிலைப்படி கணிக்கிடப்பட்டது. கோவிட் -19 தொற்று நோயைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் வழங்க வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தின் மூன்று கூடுதல் தவணைகளை அரசு முடக்கியிருந்தது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT