இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ராணுவ பயிற்சி விமானம் விபத்து: விமானி காயம்

21st Oct 2021 03:45 PM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேசத்தில் ராணுவ பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி காயங்களுடன் உயிர் தப்பினார்.

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிடாஜ் 2000 விமானம் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. பயிற்சியின்போது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நேபாளத்தில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 77ஆக உயர்வு

நல்வாய்ப்பாக விமானத்திலிருந்து பாராசூட் வாயிலாக விமானி வெளியேறியதால் உயிர்சேதம் தடுக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் உள்ள மங்காபாத் கிராமம் ஏற்பட்ட இந்த விபத்தில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. காயமடைந்த விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

அதனைத் தொடர்ந்து கிளம்பிய புகையால் அக்கம்பக்கத்தினர் அந்தப் பகுதியில் குவிந்தனர். விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : accident MadhyaPradesh IAF
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT