இந்தியா

உ.பி.யில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் பலி

ANI


ரேபரேலி: சந்தையில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் மிர்ஸா இனயதுல்லாப்பூர் பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிஹு (4), விதி(6), வைஷ்ணவி (8) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களது தந்தை நவீன்குமார் இது பற்றி கூறுகையில், ஜமுனாநகர் சந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற சகோதரிகள் மூவரும், அங்கு பொரி உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். அப்போதிலிருந்து அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலியாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த கிராமத்துக்குச் சென்று, சிறுமிகள் சாப்பிட்ட தின்பண்டத்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமிகளின் உடலை உடற்கூராய்வு செய்தும், அதில் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படவல்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT