இந்தியா

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

28th Nov 2021 04:50 PM

ADVERTISEMENT


பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவைக் குளிர்காலக் கூட்டத் தொடரில் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை (திங்கள்கிழமை) கூடவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதில் 31 கட்சிகள் பங்கேற்றன. வெவ்வேறு கட்சிகளிலிருந்து 41 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிக்கஅனைத்துக் கட்சிக் கூட்டம்: எதிர்க்கட்சிகள் முன்வைத்தது என்ன?

குளிர்காலக் கூட்டத் தொடரில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளன. 

ADVERTISEMENT

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா 2010 முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT