இந்தியா

அச்சுறுத்தும் 'ஒமிக்ரான்' கரோனா வைரஸ்; ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி

27th Nov 2021 11:14 AM

ADVERTISEMENT

நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், உயர் மட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஒமிக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய வகை கரோனாவில் தென்படும் அதிக அளவிலான மாறுதல்தள் தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் தன்மையையும் பரவல் தன்மையும் அதிகரிக்க செய்கிறது. இது தீவிரமான அறிகுறிகளுக்கு இட்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில்தான், இந்த புதிய வகை கரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர், போட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அது பரவியுள்ளது. அங்கு, இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் இந்த புதிய வகை  கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வகை கரோனாவில் மொத்தமாக 50 மாற்றங்கள் தென்பட்டுள்ளது. 

அதில், 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் புரத கூர்முனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது செலுத்தப்பட்டுவரும் கரோனா தடுப்பூசியின் இலக்காக இந்த புரத கூர்முனைகளே உள்ளன. உடலில் உள்ள அணுக்களை கடந்து உள் புகுவதற்கு இந்த புரத கூர்முனைகளையே வைரஸ் பயன்படுத்துகிறது. 

ADVERTISEMENT

இந்த கரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரான்’ எனவும் பெயரிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க வகை கரோனா சா்வதேச நாடுகளுக்கு அது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்தது. அந்த அறிவிப்பும் வெள்ளிக்கிழமை மதியமே அமலுக்கு வந்தது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 7 அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்கா்கள் அல்லாதோா் அமெரிக்கா வருவதற்கு நவ. 29 முதல் அந்நாடு தடை விதித்துள்ளது.

இதையும் படிக்கஉலகை பீதிக்குள்ளாக்கிய ‘ஒமிக்ரான்’ வகை கரோனா! பல்வேறு நாடுகளை பயணத் தடை அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா வழியாக கடந்த 15 நாள்களில் பயணம் செய்த வெளிநாட்டவா்கள் கனடா வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கனடாவை சோ்ந்தவா்கள் அவ்வாறு வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஜொ்மனியும், வெள்ளிக்கிழமை இரவு முதல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. அந்த நாட்டில் கரோனா பலி ஒரு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளில் ஜொ்மானியா்களுக்கு மட்டுமே நாட்டுக்குள் வரஅனுமதிக்கப்படும் எனவும் அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தியிராவிட்டாலும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : omicron new variant modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT