இந்தியா

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜர்!

5th Nov 2021 05:54 PM

ADVERTISEMENT

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் பிணைக்கு பின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜராகியிருக்கிறார்.

கடந்த அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

இதையும் படிக்க-கரோனா தீவிரத்தை குறைக்கும் ஃபைசர் மாத்திரைகள்; ஆய்வில் புதிய தகவல்

ADVERTISEMENT

இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் கடந்த வாரம் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளை நிராகரித்து கைதான 25 நாட்கள் கழித்து பிணை வழங்கியது. 

இந்நிலையில் பிணை விதிகளில் ஒன்றான ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால் இன்று ஆர்யன் தன் வழக்கறிஞர் மானேஷிண்டேவுடன் அலுவலகத்திற்கு ஆஜர் ஆனார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT