இந்தியா

கருப்புப் பூஞ்சை கொள்ளைத் தொற்றுநோய்: ஜம்மு-காஷ்மீர் அறிவிப்பு

24th May 2021 12:52 PM

ADVERTISEMENT


கருப்புப் பூஞ்சையை கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

பெருந்தொற்று நோய்கள் சட்டம் 1897-ன் கீழ் கருப்புப் பூஞ்சை பாதிப்பு கொள்ளைத் தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மியூகோா்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சைத் தொற்று பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், கரோனாவில் இருந்து மீண்டவா்கள், ஸ்டீராய்டு சிகிச்சை அதிகம் எடுத்துக் கொண்டவா்கள் ஆகியோரையே இந்த பூஞ்சைத் தாக்கி வருகிறது.

இந்த பூஞ்சைத் தொற்றை, கண்காணிக்கப்பட வேண்டிய கொள்ளைத் தொற்றாக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன் கேட்டுக் கொண்டது. 

அதன்படி, தமிழகம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சைத் தொற்றை கொள்ளைத் தொற்றாக அறிவித்தன.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் அரசும் இன்று கருப்பு கருப்புப் பூஞ்சைத் தொற்றை கொள்ளைத் தொற்றாக அறிவித்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT