இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

19th May 2021 03:30 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் கோடாவில் புதன்கிழமை ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை மதியம் 2.34 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கோடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பூமிக்கடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

முன்னதாக இன்று காலை நேபாளத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT