இந்தியா

பாஜக எம்எல்ஏ கோதம் லால் மீனா கரோனாவுக்கு பலி

19th May 2021 12:01 PM

ADVERTISEMENT

 

பாஜக எம்.எல்.ஏ கோதம் லால் மீனா கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார். 

கடந்த சில நாள்களுக்கு முன்னர் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட அவர் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

56 வயதான மீனா ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டம் தாரியாவாட் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். 

ADVERTISEMENT

முதல்வர் அசோக் கெஹ்லோட், பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா மற்றும் பிற தலைவர்கள் மீனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்த நான்காவது எம்எல்ஏ இவராவார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT