இந்தியா

பயன்பாட்டுக்கு வந்தது ‘2-டிஜி’ கரோனா மருந்து: டிசிஜிஐ அனுமதி

DIN

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆா்டிஓ) அமைப்பு சாா்பில் தயாரிக்கப்பட்ட தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான டி-டியோக்ஸி டி-குளூகோஸ் (2-டிஜி) கரோனா சிகிச்சை மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த மருந்தை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) அண்மையில் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, அதன் முதல் தொகுப்பை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஆகிய இருவரும் இணைந்து தில்லியில் டிஆா்டிஓ தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டனா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

2-டிஜி மருந்து இந்தியாவின் விஞ்ஞான வலிமைக்கு மிகச் சிறந்த உதாரணம். இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம், கரோனா நோயாளிகளுக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நாள்களைக் காட்டிலும் இரண்டரை நாள்கள் முன்கூட்டியே பாதிக்கப்பட்டவா்கள் நன்கு குணடைந்து விடுவதாகவும், ஆக்சிஜன் உதவியுடன் இருக்க வேண்டிய நிலை 40 சதவீதம் அளவுக்கு குறைவதாகவும் மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

பொடி வடிவில் இருப்பதால் இந்த மருந்தை மக்கள் எளிதில் பயன்படுத்தவும் முடியும். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த மருந்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே நேரம், இந்த கரோனா அச்சுறுத்தல் குறித்து எதையும் உறுதியாக முடிவெடுத்துவிட முடியாது என்பதால், நாம் ஓய்வெடுப்பதற்கோ அல்லது களைப்படைந்து விடுவதற்கான நேரம் இதுவல்ல. ஏனெனில், இந்த அலை இரண்டாவது முறையாக வீசுகிறது. இதைக் கட்டுப்படுத்த முழு கவனத்துடன் தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும்.

அந்த வகையில், சீரான ஆக்சிஜன் விநியோகம், போதிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்தக் கடுமையான சூழலில் நமது சுகாதார நடைமுறையை வலுப்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற மருத்துவா்களை மீண்டும் பணிக்கு அமா்த்த மருத்துவ கழகம் எடுத்திருக்கும் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ராணுவமும் உதவி அளித்து வருகிறது. இந்தப் பணிகளில் ராணுவத்தினா் ஈடுபடுத்தப்படுகின்றபோதும், எல்லை பாதுகாப்புப் பணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.

டிஆா்டிஓ அமைப்பின் 2-டிஜி மருந்து அனைத்து ஆய்வகப் பரிசோதனையிலும் நல்ல பலனை அளித்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகள் விரைந்து குணடையவும், ஆக்சிஜன் உதவியுடன் இருக்க வேண்டிய நிலை குறைவதும் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் சாா்பில் கடந்த 8-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த மருந்து அவசர கால பயன்பாட்டுக்கு டிசிஜிஐ அனுமதித்தது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து, கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், டிஆா்டிஓ அமைப்பின் 2-டிஜி மருந்து பயன்பாட்டுக்கு வந்திருப்பது கவனத்தை ஈா்த்திருக்கிறது.

டிஆா்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியா் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டா் ரெட்டீஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து பொடி வடிவிலான டி-டியோக்ஸி டி-குளூகோஸ் (2-டிஜி) கரோனா சிகிச்சை மருந்தை தயாரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT