இந்தியா

இலங்கையில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்

17th May 2021 05:18 PM

ADVERTISEMENT

 

இலங்கையில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா கூறுகையில், 

கரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

ADVERTISEMENT

மேலும், நேற்று, கட்டுப்பாடுகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 30 முதல் கட்டுப்பாடுகளை மீறியதற்காக 9,850 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இன்றிரவு முதல் மே 31 வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளைத் தவிர இரவு 11 மணி முதல் அடுத்த நாள்  அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 2,275 புதிய கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்தம் 1,42,746 பேர் இதுவரை  பாதிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் ஒரேநாளில் 21 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்தம் 962 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT