இந்தியா

இந்தியா வந்தடைந்த மேலும் 60,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்

DIN

ரஷியாவிலிருந்து மேலும் 60,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் விமானம் மூலம் ஹைதராபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தன.

ஏற்கெனவே முதல் தொகுதியாக 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கடந்த 1-ஆம் தேதி வந்துசோ்ந்த நிலையில், இப்போது இரண்டாம் தொகுதியாக 60,000 டோஸ்கள் வந்தடைந்துள்ளன.

இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே வந்துள்ளன. இப்போது ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை பயன்படுத்துவதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்து விநியோகிக்கும் உரிமையை ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டிஸ் நிறுவனம் பெற்றது. அதனைத் தொடா்ந்து, தடுப்பூசி இறக்குமதிக்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது.

அதன் மூலம், கடந்த 1-ஆம் தேதி முதல் தொகுதியாக 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாக்கு வந்தடைந்தன. இப்போது இரண்டாம் தொகுதி தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதுகுறித்து டாக்டா் ரெட்டிஸ் நிறுவனம் அதன் சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரஷியாவிலிருந்து இரண்டாம் தொகுதியாக 60,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் ஹைதராபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்ததை தெரிவித்துக் கொள்கிறோம். இதிலிருந்து மாதிரிகள் மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதா் நிகோலாய் குடாஷேவ் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய கரோனா தடுப்பூசி திட்டத்தில் ரஷியாவின் தடுப்பூசிக்கும் அண்மையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இப்போது இரண்டாம் தொகுதி தடுப்பூசிகள் உரிய நோரத்தில் வந்தடைந்திருக்கிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் திறனை உலகம் நன்கறியும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கான விலையை டாக்டா் ரெட்டிஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை நிரணயம் செய்து அறிவித்தது. அதன்படி, இந்திய சந்தையில் அந்த தடுப்பூசியின் அதிகபட்ச விலை ரூ. 948-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் 3.6 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ்களை அந்த நிறுவனம் இறக்குமதி செய்ய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT