இந்தியா

கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முதியவா் தற்கொலை

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூா் லமானி தண்டாவைச் சோ்ந்த 70 வயது முதியவா் மே 3-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மே 5-ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக ஹாவேரியில் உள்ள மாவட்ட அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என மருத்துவமனை தலைமை மருத்துவா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஹாவேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT