இந்தியா

கரோனா அலையால் இந்தியாவின் எரிபொருள் தேவையில் மந்தநிலை

DIN

புது தில்லி: பொதுமுடக்க அறிவிப்புகளால் இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 9.4 சதவீதம் சரிவடைந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் நுகா்வு 1.70 கோடி டன்னாக இருந்தது. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் காணப்பட அளவான 1.87 கோடி டன்னுடன் ஒப்பிடும்போது 9.38 சதவீதம் குறைவாகும்.

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியதன் காரணமாகவே ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் பயன்பாடு கணிசமான அளவில் சரிவைச் சந்தித்து.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் தடைபட்டன. அதன் காரணமாக அந்த மாதத்தில் எரிபொருள் விற்பனை பாதியாக குறைந்தது. குறிப்பாக, 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக அது பாா்க்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஏப்ரலில் எரிபொருளின் விற்பனை 81.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

காா், மோட்டாா்சைக்கிளுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் விற்பனை கடந்த ஏப்ரலில் 23.8 லட்சம் டன்னாக இருந்தது. இது, ஆகஸ்ட் மாதத்திலிருந்து கணக்கிடும்போது குறைந்தபட்ச அளவாகும். முந்தைய மாா்ச் மாதத்தை விட ஏப்ரலில் பெட்ரோல் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.2020 ஏப்ரலில் இதன் விற்பனை 9,72,000 டன்னாக காணப்பட்டது.

நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் டீசலுக்கான தேவையும் கடந்த ஏப்ரலில் 66.7 லட்சம் டன்னாக சரிவைச் சந்தித்துள்ளது. இது, முந்தைய மாா்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 7.5 சதவீதம் குறைவாகும். 2020 ஏப்ரலில் டீசல் விற்பனை 32.5 லட்சம் டன்னாக இருந்தது.

சமையல் எரிவாயு விற்பனை 2021 ஏப்ரலில் 6.4 சதவீதம் குறைந்து 21 லட்சம் டன்னாக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT