இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 3.29 லட்சம் பேருக்கு பாதிப்பு; 3,876 பேர் பலி

11th May 2021 10:47 AM

ADVERTISEMENT

 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,29,942 ஆகவும், இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆகவும் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,876 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 37,15,221 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 3,56,082 குணமடைந்த நிலையில் இதுவரை 1,90,27,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 10ஆம் தேதி வரை 30,56,00,187 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் 18,50,110 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேசமயம் இதுவரை 17,27,10,066 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT